Advertisement

பிக்பாஸ் 6 சீசன் போட்டியாளர்கள் இவர்களா? வெளியான ஒரு பட்டியல்

By: Nagaraj Fri, 22 July 2022 11:13:14 PM

பிக்பாஸ் 6 சீசன் போட்டியாளர்கள் இவர்களா? வெளியான ஒரு பட்டியல்

சென்னை: பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களாக ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகியது. கிட்டத்தட்ட 3 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் தனியாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பிக்பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்துவருகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இதன் காரணமாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரபலங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் துவங்கவிருக்கிறது. அதற்கான முன்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|