Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஹாலிவுட்டில் படம் எடுக்கிறீர்களா... ராஜமௌலியிடம் கேட்ட ஜேம்ஸ் கேமரூன்

ஹாலிவுட்டில் படம் எடுக்கிறீர்களா... ராஜமௌலியிடம் கேட்ட ஜேம்ஸ் கேமரூன்

By: Nagaraj Sat, 21 Jan 2023 10:27:26 PM

ஹாலிவுட்டில் படம் எடுக்கிறீர்களா... ராஜமௌலியிடம் கேட்ட ஜேம்ஸ் கேமரூன்

மும்பை: ஹாலிவுட்டில் படம் எடுக்க வேண்டுமானால் சொல்லுங்கள். அதைப் பற்றி பேசுவோம் என்று ராஜமௌலியிடம் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது. அப்போ அடுத்தாக ராஜமௌலி ஹாலிவுட் பறப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி வெளியான RRR படத்தின் ‘நாட்டு கூத்து’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. ஒரிஜினல் பாடல் பிரிவில் சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை ‘நாட்டு கூத்து’ பெற்றது.

கிராமியப் பாடலுக்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். கீரவாணி மேடையேறி கோல்டன் குளோப் விருது பெற்றார். இந்நிலையில், கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர். திரைப்பட இயக்குனர் ராஜமௌலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி உட்பட பலர் பங்கேற்றனர்.

cinema,hollywood,james cameron,rajamouli, ,ஆர்வம், ஜேம்ஸ் கேமரூன், ராஜமௌலி, ஹாலிவுட்

இந்த நிகழ்வுக்குப் பிறகு, ஹாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநரும் அவதார் படத்தின் இயக்குநருமான ஜேம்ஸ் கேமரூனை சந்தித்தார் ராஜமௌலி. இந்த சந்திப்பில் இரு இயக்குனர்களும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.

இங்கே (ஹாலிவுட்டில்) படம் எடுக்க வேண்டுமானால் சொல்லுங்கள், அதைப் பற்றி பேசுவோம் என்று ராஜமௌலியிடம் ஜேம்ஸ் கேமரூன் கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :
|