Advertisement

உலகம் முழுவதும் சுற்றும் நாயகனின் கதையாம்

By: Nagaraj Thu, 15 Sept 2022 11:42:32 PM

உலகம் முழுவதும் சுற்றும் நாயகனின் கதையாம்

ஐதராபாத்: மகேஷ் பாபுவுடன், இயக்குனர் ராஜமௌலி இணையும் படம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படம் உலகம் முழுவதும் சுற்றும் நாயகனின் கதை என்று ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

ராஜமௌலி இயக்கிய முதல் படமான 'ஸ்டூடண்ட் நம்பர் 1' திரைப்படம் முதல் அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் இந்திய மொழிகளில் ரீமேக்காகியிருக்கின்றன. 'ஸ்டூடண்ட் நம்பர் 1' திரைப்படம் தமிழில் அதே பெயரில் சிபி சத்யராஜ் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.


அவரது 'சிம்ஹாத்திரி' திரைப்படம் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் 'கஜேந்திரா' என்ற பெயரிலும், அவரது 'சத்ரபதி' திரைப்படம் தமிழில் குருவி என்ற பெயரிலும், விக்ரமார்குடு சிறுத்தை என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வெற்றிபெற்றன. 'விக்ரமார்குடு' திரைப்படம் ஹிந்தியில் 'ரௌடி ரத்தோர்' என்ற பெயரிலும் ரீமேக்காகியிருக்கிறது.

director,mahesh babu,ayan,adventures,rajamouli,film ,
இயக்குனர், மகேஷ்பாபு, அயன், சாகசங்கள், ராஜமௌலி, படம்

நகைச்சுவை நடிகரான சுனிலை 'மரியாதை ராமண்ணா' என்ற படத்தில் ஹீரோவாக்கி வெற்றிபெற்றார். அந்தப் படம்தான் சந்தானம் நடிப்பில் வெளியான 'வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்' என்ற பெயரில் வெளியானது. ஈயை ஹீரோவாக வைத்து நான் ஈ என்ற பெயரில் வெற்றிபெற்றார் ராஜமௌலி. ஃபேண்டஸி படமான மகதீரா படத்தை எடுத்து அதிலும் வெற்றிக்கொடி நாட்டினார்.


அவரது பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் படங்களை உலகமே கொண்டாடியதை நாம் அறிவோம். அந்த வரிசையில் மகேஷ் பாபுவுடன் இணையும் படம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படம் உலகம் முழுவதும் சுற்றும் நாயகனின் கதை என்று ராஜமௌலி சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தமிழில் அயன் படத்தை போன்று சாகசங்கள் நிறைந்த கதையாக இருக்கப்போகிறது என்பது அவர் அளித்த தகவல் தெளிவாக உணர்த்துகிறது.

Tags :
|