Advertisement

அரவிந்த்சாமியின் உண்மையான தந்தை சீரியல் நடிகர் டெல்லி குமார்

By: Nagaraj Mon, 04 Sept 2023 12:34:38 PM

அரவிந்த்சாமியின் உண்மையான தந்தை சீரியல் நடிகர் டெல்லி குமார்

சென்னை: அரவிந்த்சாமியின் உண்மையான தந்தை சீரியல் நடிகர் டெல்லி குமார் என்று தெரியவந்துள்ளது. இதை அவரே பேட்டியில் தெரிவித்துள்ளார்.

21 வயதில் நடிக்க துவங்கி இளம் பெண்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் அரவிந்த் சாமி. ரொமாண்டிக் ஹீரோவாக தன்னுடைய திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். இடையில் தொழில், குடும்பப்பிரச்னை என்று சினிமாவை விட்டு விலகினார்.

சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகி இருந்த அரவிந்த் சாமிக்கு கம் பேக் படமாக அமைந்தது தனி ஒருவன் திரைப்படம். இந்த படம் வாயிலாக இவர் மீது வைத்திருந்த பார்வை ஒட்டுமொத்தமாக மாறிய என்றால் மிகையில்லை.

delhi kumar,father,aravindsamy,adopted,interview ,டெல்லி குமார், தந்தை, அரவிந்த்சாமி, தத்து கொடுத்தனர், பேட்டி

இந்நிலையில் அரவிந்த் சாமியின் தந்தை V.D. சாமி என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் அரவிந்த் சாமியின் தந்தை இல்லையாம். பிரபல சீரியல் நடிகர் டெல்லி குமார் தான் அரவிந்த் சாமியின் உண்மையான தந்தையாம்.

அதை நடிகர் டெல்லி குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அரவிந்த் சாமி தனக்கு பிறந்தவர் என்றும், அவர் பிறந்தவுடன் தத்து கொடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் மட்டும் அரவிந்த்சாமி வந்து கலந்து கொள்வார் என தெரிவித்துள்ளார். நடிகர் டெல்லி குமார் ஆனந்தம், மெட்டி ஒலி என பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|