- வீடு›
- பொழுதுபோக்கு›
- ஆர்யா படத்தின் 2வது பாடல் வெளியானது... இணையத்தில் செம வைரல்
ஆர்யா படத்தின் 2வது பாடல் வெளியானது... இணையத்தில் செம வைரல்
By: Nagaraj Wed, 17 May 2023 10:39:26 PM
சென்னை: ஆர்யா படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் ‘வெந்து தணிந்த காடு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சித்தி இட்னானி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ‘கதர்பாட்சா என முத்துராமலிங்கம்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘கரிக்கோளம்பு வாசம்’ பாடல் வெளியாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் பாடிய இந்த பாடல் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படம் ஜூன் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.