Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஆர்யா நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ஆர்யா நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

By: Nagaraj Mon, 10 Oct 2022 09:59:30 AM

ஆர்யா நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சென்னை: அடுத்த படத்தின் அப்டேட்... ஆர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கேப்டன். இப்படம் ஹாலிவுட் பாணியில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தை அடுத்து ஆர்யாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இயக்குனர் முத்தையாவுடன் ஒரு படத்தில் இணைந்துள்ளார் ஆர்யா. கிராமத்து கதைகளில் அதிக ஆர்வம் கொண்ட முத்தையா சமீபத்தில் விருமன் படத்தை இயக்கியிருந்தார். கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து தற்போது ஆர்யாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சிம்புவுடன் வெந்து தனந்த காடு படத்தில் நடித்த நடிகை சித்தி இதானி நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

arya,captain,last film,siddhi ithani,villainous ,ஆர்யாவின், கடைசிப் படம், கேப்டன், சித்தி இதானி, ஹாலிவுட்

இப்படி ஒரு மெகா கூட்டணியில் இப்படம் உருவாகி இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தையாவின் பாணியில் இப்படம் பக்கா கிராமத்து கதையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் இந்தப் படத்தில் நாம் எதிர்பார்க்காத அளவுக்கு ஆர்யா வில்லனாக நடிக்கிறார் என்று தெரிகிறது. இதுவரை பல்வேறு வேடங்களில் நடித்து வரும் ஆர்யாவுக்கு இந்தப் படம் வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Tags :
|