Advertisement

ஹீரோ எவ்வளவு முக்கியமோ, வில்லனும் அந்த அளவுக்கு முக்கியம்

By: Nagaraj Wed, 26 July 2023 11:38:26 PM

ஹீரோ எவ்வளவு முக்கியமோ, வில்லனும் அந்த அளவுக்கு முக்கியம்

சென்னை: படத்துக்கு ஹீரோ எவ்வளவு முக்கியமோ, வில்லனும் அந்த அளவுக்கு முக்கியம். அதனால்தான் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் ‘கல்கி 2989 ஏ.டி’ படத்தில் நடிகர் கமல்ஹாசன் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க உள்ளார். இதில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதுகுறித்து கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், “கல்கி படத்தில் வில்லனாக நடிக்கிறேன். இதில் கதாநாயகனுக்கு எவ்வளவு முக்கியம் இருக்குமோ அந்த அளவுக்கு வில்லன் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும். ‘கல்கி’ படத்தில் நான் நடிக்கிறேன் என்றதும் யாரும் நம்பவில்லை.

acting,actor,description,kamal haasan,villain ,கமல்ஹாசன், நடிகர், நடிப்பு, வில்லன், விளக்கம்

சான் டியாகோ காமி நிகழ்ச்சிக்கு நான் சென்றபோது பிரபாஸ் எனது இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு நன்றி சார். நீங்கள் எங்கள் படத்தில் நடிக்கிறீர்கள் என்பதை இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லை. படக்குழுவினர் உங்களை எப்படி சம்மதிக்க வைத்தார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.

சில ஆயிரம் ஆண்டுகளாக நாம் புராணங்களை பின்பற்றி வருகிறோம். அந்த புராணங்களின் பெருமையை பறை சாற்றுவதற்காகவே நாக் அஸ்வின் இந்த படத்தை எடுக்கிறார். நானும் இதில் சந்தோசமாக நடிக்க இருக்கிறேன்.

ஒரு படத்துக்கு ஹீரோ எவ்வளவு முக்கியமோ, வில்லனும் அந்த அளவுக்கு முக்கியம். அதனால்தான் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்றார்.

Tags :
|
|