Advertisement

அசீம் உங்களை விமர்சிக்கவில்லை... கண்டிக்கிறேன்; கமல் பேசும் ப்ரோமோ

By: Nagaraj Sun, 30 Oct 2022 8:54:53 PM

அசீம் உங்களை விமர்சிக்கவில்லை... கண்டிக்கிறேன்; கமல் பேசும் ப்ரோமோ

சென்னை: அசீம் உங்களிடம் நான் எதையும் கேட்க விரும்பவில்லை. நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். நான் உங்களை விமர்சிக்கவில்லை, கண்டிக்கிறேன் என்று கமல் கூறும் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் அசீம் அனைவரிடமும் தகராறு செய்தார். விக்ரம், அமுதவாணன் என எல்லோரிடமும் மோசமான வார்த்தைகளோடு சண்டையிட்டார். கடைசியாக தனலட்சுமியின் தோள்பட்டையில் கைவைத்து தள்ளிவிட்ட சம்பவம் பெரும் கண்டனத்திற்கு ஆளானது.

இதனால், மற்ற போட்டியாளர்கள் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துக் கொள்வதாக அசீமுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதனை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் கடுமையான வார்த்தைகளால் அவர்களை விமர்சித்தார்.

kamal,aseem,rebuked,not criticized,bigg boss,agitated ,கமல், அசீம், கண்டிக்கிறேன், விமர்சிக்கவில்லை, பிக்பாஸ், கொந்தளித்தார்

இந்நிலையில், தற்போது வெளியான புதிய ப்ரோமோவில், அசீம் உங்களிடம் நான் எதையும் கேட்க விரும்பவில்லை. நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். நான் உங்களை விமர்சிக்கவில்லை, கண்டிக்கிறேன்.

யாருக்காக தெரியுமா உங்கள் பையனுக்காக. இதுதான் என் Strategy என்று நீங்கள் சொன்னால், மற்றவர்களிடம் நான் அஸிமிடம் கவனமாக இருங்கள் என்று சொல்ல வேண்டும். அவமானப்படுத்துவார், உடல் மொழியை கேலி செய்வார். தயாராக இருங்கள், நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள். இவர்களும் செய்ய வேண்டியதை செய்வார்கள் என கொந்தளித்துள்ளார் கமல்ஹாசன்.

Tags :
|
|