Advertisement

சீன மொழியில் அசுரன் படம் ரீமேக் ஆகவில்லை - தயாரிப்பாளர் தாணு

By: Monisha Tue, 09 June 2020 6:08:16 PM

சீன மொழியில் அசுரன் படம் ரீமேக் ஆகவில்லை - தயாரிப்பாளர் தாணு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. இந்தப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தை இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் எனப் பலரும் பாராட்டியுள்ளனர். இந்தப் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதையடுத்து இதன் ரீமேக் உரிமைக்குக் கடும் போட்டி நிலவியது. தற்போது தெலுங்கில் 'நாராப்பா' என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது. கன்னடத்திலும் ரீமேக் ஆகவுள்ளது.

இதனிடையே, சீன மொழியில் 'அசுரன்' ரீமேக் ஆகவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஏனென்றால், தமிழில் உருவான ஒரு படம், சீன மொழியில் ரீமேக் செய்யப்படுவது இது முதன்முறை என்று பலரும் குறிப்பிட்டனர்.

chinese language,asuran movie,remake,producer dhanu ,சீன மொழி,அசுரன் படம்,ரீமேக்,தயாரிப்பாளர் தாணு

இது தொடர்பாக 'அசுரன்' படத்தின் தயாரிப்பாளர் தாணு கூறியதாவது:- எப்படி இப்படியொரு தகவல் வெளியானது என்று எனக்குத் தெரியவில்லை. சீன மொழியில் இந்தப் படம் ரீமேக் ஆகவில்லை. இது தொடர்பாக என்னிடம் யாரும் பேசவுமில்லை. ஆனால், 'தங்கல்' படத்தைப் போலவே சீன மொழியில் 'அசுரன்' படத்தை டப்பிங் செய்து வெளியிடும் எண்ணமுள்ளது. இது தொடர்பான பணிகள் கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கலாம் என இருக்கிறோம்.

'தங்கல்' படம் எப்படி ஆமிர் கானுக்கு ஒரு பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்து, பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியதோ அதோ போல் 'அசுரன்' படமும் தனுஷுக்கு அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
|