Advertisement

நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏடிகே வெளியேறினார்

By: Nagaraj Mon, 16 Jan 2023 11:48:38 AM

நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏடிகே வெளியேறினார்

சென்னை: பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து ஏடிகே நேற்று வெளியேறினார். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ. 16 முதல் ரூ. 19 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு வீட்டிற்குள் வந்ததாக கூறப்படுகிறது.

பிரம்மாண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். முதல் சீசனின் பெரிய வெற்றியை தொடர்ந்து 5 சீசன்கள் தொடர்ந்து ஒளிபரப்பாக இப்போது 6வது சீசனும் முடிவுக்கு வரப்போகிறது.

இந்த 6வது சீசனில் பிக்பாஸ் குழுவினர் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியுள்ளனர், சில போட்டியாளர்கள் நமக்கு பரீட்சயப்படாதவர்களாக இருந்தனர்.

salary,yesterday,atk,quit,kamal,bigg boss ,சம்பளம், நேற்று, ஏடிகே, வெளியேறினார், கமல், பிக்பாஸ்

கடைசியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து 90 நாட்களை தாண்டி இருந்த ரச்சிதா வெளியேறியிருந்தார். தற்போது பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து ஏடிகே நேற்று வெளியேறிவிட்டார். அவர் பிக்பாஸ் வீட்டில் 90 நாட்களை தாண்டி இருந்துள்ளார். ஏறத்தாழ 100 நாட்கள் ஏடிகே பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ளார்.

அவருக்கு ஒரு நாளைக்கு ரூ. 16 முதல் ரூ. 19 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு வீட்டிற்குள் வந்ததாக கூறப்படுகிறது.

Tags :
|
|
|
|