Advertisement

அயலான் படத்திற்கு கிராபிக்ஸ் பணிக்கு இணைந்த அவதார் 2 நிபுணர்கள்

By: Nagaraj Thu, 22 Dec 2022 10:25:27 AM

அயலான் படத்திற்கு கிராபிக்ஸ் பணிக்கு இணைந்த அவதார் 2 நிபுணர்கள்

சென்னை: சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் அவதார்-2 படத்தின் கிராபிக்ஸ் நிபுணர்கள் இணைந்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

ayalon,graphics works,avatar 2,graphics artists,release ,அயலான், கிராபிக்ஸ் பணிகள், அவதார் 2, கிராபிக்ஸ் கலைஞர்கள், ரிலீஸ்

அயலான் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த 5 க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாகி விட்டன. ஆனால் அயலான் நிலை என்னவென்றே தெரியவில்லை. முதலில் இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நண்பரான RD ராஜா தயாரித்தார். பின்னர் அவரிடம் இருந்து கே ஜே ஆர் நிறுவனம் கைப்பற்றி தயாரித்தது.

கடந்த ஆண்டு ஷூட்டிங் முடிந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இப்போது அந்த பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அயலான் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது இப்போது வரை உறுதியாகவில்லை.

இந்நிலையில் மீண்டும் கிராபிக்ஸ் பணிகள் தொடங்க உள்ளதாகவும், இதற்காக அவதார் 2 படத்தில் பணியாற்றிய கிராபிக்ஸ் கலைஞர்கள் பணியாற்ற உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சரி இப்பவாச்சும் எப்ப ரிலீஸ் என்று அறிவிப்பார்களா என்று பார்ப்போம்.

Tags :
|