Advertisement

ஓடிடியில் வெளியாகிறது அவதார் 2

By: vaithegi Wed, 17 May 2023 11:58:10 AM

ஓடிடியில் வெளியாகிறது அவதார் 2

அவதார் 2 திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வருகிற ஜூன் 7 -ம் தேதி வெளியீடு .... இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அதனை அடுத்து உலகம் முழுவதும் 160-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்தது.

avatar 2,ott ,அவதார் 2,ஓடிடி

இந்த நிலையில், அவதார் 2 திரைப்படம் எப்பொழுது ஓடிடியில் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தற்பொழுது அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே அதன்படி, அவதார் 2 திரைப்படம் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரிக்குற ஜூன் மாதம் 7 -ம் தேதி வெளியாகிறது. முன்னதாக, அவதார் படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.

Tags :