Advertisement

அவதார்: தி வே ஆப் வாட்டர் 10 நாட்களில் இவ்வளவு வசூலா!

By: vaithegi Wed, 28 Dec 2022 10:26:48 AM

அவதார்: தி வே ஆப் வாட்டர் 10 நாட்களில் இவ்வளவு வசூலா!

மெகா வசூல் .... ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் 1 பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ள காட்சியாக அமைந்தது.

இதனை அடுத்து இது வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் 2-ம் பாகம் 'அவதார் தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் தயாராகி ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் கடந்த 16 ந்தேதி வெளியானது.

avatar,collection ,அவதார்,வசூல்

அவதார்: தி வே ஆப் வாட்டர், சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படமான அவதாரின் தொடர்ச்சியாகும். அவதார் 2 , 2- வது ஞாயிற்றுக்கிழமை வரை இந்திய மதிப்பில் ரூ 7 ஆயிரம் கோடி வசூலித்துள்ளது.

இந்தியாவில் அவதார்: தி வே ஆப் வாட்டர் 10 நாட்களில் ரூ.300 கோடியைத் தாண்டியது. வரும் நாட்களில் நாட்டில் ரூ.500 கோடி என எதிர்பார்க்கப்படுகிறது. அவதார்: தி வே ஆப் வாட்டர் படம் தற்போது உலகம் முழுவதும் 1 பில்லியன் டாலர்களை நோக்கி முன்னேறி கொண்டு வருகிறது.

Tags :
|