Advertisement

”அயலான்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு

By: vaithegi Mon, 24 Apr 2023 2:20:39 PM

”அயலான்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு

நவம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது .... நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இதன் இடையில், அவர் நடித்து முடித்துள்ள அயலான் திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதியை தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேஜிஆர் அறிவித்துள்ளது.

எலியன் உலகத்திற்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல இயக்குனரான ரவிக்குமார் இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

ayalon,release ,அயலான்,ரிலீஸ்

கடந்த ஆண்டே இப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில், CGI காட்சிகளுக்களுக்கான வேலைகள் அதிமாக இருந்த காரணத்தால் அதற்கான வேலைகள் முடிய சில மாதங்கள் ஆகிவிட்டது. இதனால் படம் வெளியாகாமல் இருந்தது.

ஏற்கனவே படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, படம் வரும் இந்த படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படம் ஒரு பான்-இந்தியன் திரைப்படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான CGI காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

Tags :
|