Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மிஷ்கின் இயக்கும் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்திற்கு டைட்டில் வழங்கிய பாலா!

மிஷ்கின் இயக்கும் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்திற்கு டைட்டில் வழங்கிய பாலா!

By: Monisha Tue, 22 Sept 2020 3:44:28 PM

மிஷ்கின் இயக்கும் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்திற்கு டைட்டில் வழங்கிய பாலா!

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாகவும், இந்த படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைத்து இருப்பதாகவும், இந்தப் படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படம் ’பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகமாக இருந்தாலும் இன்னும் இந்த படத்துக்கு டைட்டில் வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்காக தனக்கு சொந்தமான டைட்டிலை பாலா அவர்கள் கொடுத்து உதவி செய்து இருப்பதாகவும் அதற்காக அவருக்கு நன்றி செலுத்தி கொள்வதாகவும் மிஷ்கின் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

director mishkin,twitter,director bala,title ,இயக்குனர் மிஷ்கின்,டுவிட்டர்,இயக்குனர் பாலா,டைட்டில்

நான் ஒரு மனிதருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அது நான் மிகவும் நேசிக்கின்ற மகா கலைஞனான என் பாலா 'பிசாசு 2' இயக்கப்போகிறேன் என்று சொன்னவுடன் உடனடியாக அவருக்கு சொந்தமான டைட்டிலை எனக்கு வழங்கிய பாலாவின் நெற்றியில் என் அன்பான முத்தங்களை பதிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கிய ’பிசாசு’ படத்தின் டைட்டிலை முடிவு செய்தது பாலா என்று கூறப்பட்டது.

Tags :