Advertisement

குக் வித் கோமாளியில் கடைசி நேரத்தில் இணைந்த பாலா

By: Nagaraj Sat, 22 July 2023 6:46:01 PM

குக் வித் கோமாளியில் கடைசி நேரத்தில் இணைந்த பாலா

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடியும் நேரத்தில் மணிமேகலை மற்றும் பாலா இருவரும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் மாபெரும் வெற்றி நடைபோடும் நிகழ்ச்சி என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது 'குக் வித் கோமாளி" தான். உலகளவில் பார்வையாளர்களை கொண்டுள்ள 'குக் வித் கோமாளி', முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சமையல் நிகழ்ச்சியை நடத்துவதே இதன் தனி சிறப்பு என்று கூறலாம்.

குக்குடன் கோமாளி சேர்ந்து நகைச்சுவையுடன் சமைக்கும் இந்த நிகழ்ச்சி 3 சீசன்களை கடந்து, வெற்றிகரமான 4 வது சீசனை நடத்தி கொண்டிருக்கிறது. இந்த சீசன் தற்போது தனது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற வைல் கார்டு எண்ட்ரியில் ஆண்ட்ரியன் வெற்றிபெற்றார்.

இந்த நிலையில் அடுத்த வாரம் ஃபைனல்ஸ் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் முந்தைய சீசன் குக்குளும், கோமாளிகளும் பங்கேற்கவுள்ளனர்.

cook with komali,bala,joy,fans,participated ,குக் வித் கோமாளி, பாலா, மகிழ்ச்சி, ரசிகர்கள், பங்கேற்றார்

ஏற்கனவே மணிமேகலை, நீண்ட நாட்களுக்கு பிறகு தொகுப்பாளராக குக்வித் கோமாளிக்கு மாஸ் எண்ட்ரி கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது பாலா நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். இதற்கான ப்ரோமோ இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் கோமாளி புகழ், சிவாங்கி, பாலா, மணிமேகலை உள்ளிட்டோர் ரசிகர்கள் மனதில் ஒரு குடும்ப உறுப்பினராக இணைந்தனர். இந்த நிலையில் கடந்த சீசனில் புகழ் அவ்வபோது மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்கு பலரும் புகழ் நிகழ்ச்சி முழுவதும் வரவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன் படி புகழ் இந்த சீசன் முழுவதும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் மணிமேகலையும், பாலாவும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் நிகழ்ச்சி முடியும் நேரத்தில் இருவரும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|
|
|