Advertisement

அழுகை, சிரிப்பு, ஷிவானி என்று வெளியான பாலாஜியின் ப்ரோமோ வீடியோ

By: Nagaraj Wed, 28 Oct 2020 7:46:05 PM

அழுகை, சிரிப்பு, ஷிவானி என்று வெளியான பாலாஜியின் ப்ரோமோ வீடியோ

ஷிவானியுடன் ஓகே ஆகிடுச்சா... என்ற கேள்விக்கு சிரிக்கிறார் பாலாஜி. இது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவில் வெளியாகி உள்ளது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, மகிழ்ச்சி, கண்ணீர், கோபம், சண்டை என சென்றுக் கொண்டிருக்கிறது. நேற்று முழுவதும் அனிதா அழுதுக் கொண்டிருந்த நிலையில், இன்று பாலா கண்ணீர் விடுகிறார்.

இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில், அர்ச்சனாவுக்கும் பாலாவுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. 'கேப்டன் பண்ணது எனக்கு புடிக்கல, அதனால எனக்கு கேப்டன புடிக்கல' என பாலா சொல்ல, 'பாலா சார் சொல்லிட்டாரு, அவர் வர்ற வரைக்கும் வெயிட் பண்றோம்ன்னு எங்களால இருக்க முடியாது' என அர்ச்சனா பவ்யமான உடல்மொழியுடன் நடித்துக் காட்டுகிறார்.

balaji,suresh chakraborty,shivani,archana,big boss ,பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, அர்ச்சனா, பிக்பாஸ்

போதாகுறைக்கு, ரியோவும் அவர் பங்குக்கு பாலாவுடன் சண்டையிடுகிறார். 'வீட்டு கேப்டனான எனக்கு அடுத்த 4 நாளைக்கு பதில் சொல்றது, உங்க கடமை' என்கிறார் அர்ச்சனா.

இதையடுத்து வெளியில் தனியாக சென்று, அழுகிறார் பாலாஜி. இரண்டாவது ப்ரோமோவில், அழுததற்கான காரணத்தை பாலாஜியிடம் கேட்கிறார் ஷிவானி. அது எமோஷனலாகிடுச்சி என பாலாஜி சொல்கிறார். 'நம்ம திமிரா பேசுறனால, எல்லாத்துக்கும், திமிராவே தான் இருப்போம்ன்னு முடிவு பண்ணிட்டாங்க' என்கிறார்.

'நீங்க நேர்மையா இருக்கீங்க பட் அத சொல்ற விதம் ஆட்டிட்யூடடா இருக்கு' என்கிறார் ஷிவானி. பின்னர் 'ஷிவானி கூட ஓகே ஆச்சா' என சம்யுக்தா கேட்க, 'என்ன ஓகே ஆச்சா? எதுவா இருந்தாலும் தெளிவா கேளுங்க' என சிரிக்கிறார் பாலாஜி. 'நல்லாருக்கு ஆங்ங்' என கவுண்டர் கொடுக்கிறார் சுரேஷ் சக்ரவர்த்தி.

Tags :
|