Advertisement

“ஜப்பான்” திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை

By: vaithegi Thu, 09 Nov 2023 3:37:08 PM

“ஜப்பான்” திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை

எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தில் அனு இமானுவேல், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிபில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இதையடுத்து சட்டவிரோதமாக சுமார், 1,177 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகளில் சட்டவிரோதமாக படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று ட்ரீம் வாரியர் பிட்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருந்தது.

japan,websites ,ஜப்பான்,இணையதளங்கள்


இந்த நிலையில், இன்று காலை இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஜப்பான் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் நாளை உலக முழுவதும் வெளியாகிறது.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், படத்தை சட்ட விரோதமாக 1,177 இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.மேலும் அமெரிக்காவில் மட்டும் சுமார், 400 திரையரங்குகளில் நாளை வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|