Advertisement

ஒரு பில்லியன் டாலர் வசூலை தாண்டியது பார்பி திரைப்படம்

By: Nagaraj Mon, 07 Aug 2023 8:21:44 PM

ஒரு பில்லியன் டாலர் வசூலை தாண்டியது பார்பி திரைப்படம்

நியூயார்க்: ஒரு பில்லியன் டாலர் வசூலைத் தாண்டியது 'பார்பி' திரைப்படம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பெண் இயக்குநரின் திரைப்படம் ஒரு பில்லியன் வசூலிப்பது முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரிலீஸான மூன்றாவது வாரத்திலேயே ”பார்பி” திரைப்படம் உலகளவில் ஒரு பில்லியன் டாலரைத் தாண்டி வசூலித்து வருகிறது.

vasool vedati,barbie movie,debut,female director ,வசூல் வேட்டை, பார்பி திரைப்படம், முதல்முறை, பெண் இயக்குனர்

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓப்பன்ஹைமரும், கிரேட்டா கெர்விக் என்ற அமெரிக்க நடிகை இயக்கிய பார்பியும், ஒரே நாளில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும், பார்பி பொம்மைகளைத் தயாரித்துவரும் மட்டெல் நிறுவனமும் இணைந்து தயாரித்த பார்பி திரைப்படம் பெண் இயக்குநஉலகளவில் சுமார் எட்டாயிரத்து 500 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்துள்ளது.

ஒரு பெண் இயக்குநரின் திரைப்படம் ஒரு பில்லியன் டாலர் வசூலை குவிப்பது உலகிலேயே முதல்முறையாகும்.

Tags :
|