Advertisement

பொறுமையாக இருங்க... வலிமை படத்தின் சிறப்பான அப்டேட் வர போகுது

By: Nagaraj Tue, 22 Sept 2020 8:36:27 PM

பொறுமையாக இருங்க... வலிமை படத்தின் சிறப்பான அப்டேட் வர போகுது

கொஞ்சம் பொறுமையா இருங்க. நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான அப்டேட் வரப் போகுது என்று அஜித்தின் வலிமை பட வில்லன் நடிகர் கார்த்திகேயா டுவிட்டரில் பதிவிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை படத்தை வினோத் இயக்கி வருகிறார். இந்த கூட்டணி நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்து வலிமை படத்தில் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்த நிலையில், இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்களும் வலிமை படப்பிடிப்பு எப்போது நடைபெறும் என்று கேட்டு வருகின்றனர். இந்நிலையில் வலிமை பட வில்லன் கார்த்திகேயா படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ajith movie,strength,villain actor,update,twitter ,அஜித் படம், வலிமை, வில்லன் நடிகர், அப்டேட், டுவிட்டர்

வலிமை படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து மழை பொழிந்தனர். அதோடு வலிமை பட அப்டேட் குறித்தும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக டுவிட்டரில், "எனது பிறந்தநாளில் அஜித் ரசிகர்கள் காட்டிய அன்புக்கு ஸ்பெஷல் நன்றி. நிச்சயம் கடினமாக உழைத்து உங்களை பெருமை பட வைப்பேன். கொஞ்சம் பொறுமையா இருங்க. நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான அப்டேட் வரப் போகுது. என்ன நான் சொல்றது." என்று எழுதியுள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது குறித்த அப்டேட் வரலாம் அல்லது படம் குறித்த வேற அப்டேட் வரலாம் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Tags :
|