Advertisement

பிச்சைக்காரன்-2 ஆரம்ப காட்சி டிரைலர் வெளியீடு

By: vaithegi Fri, 10 Feb 2023 7:40:49 PM

பிச்சைக்காரன்-2 ஆரம்ப காட்சி டிரைலர் வெளியீடு

டிரைலர் வெளியானது ரசிகர்கள் மகிழ்ச்சி .... சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து இந்த படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இதையடுத்து

இப்படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

trailer,beggar ,டிரைலர் ,பிச்சைக்காரன்

எனவே அதன்படி, இந்த படத்தின் ஆரம்ப காட்சி டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 3.45 நிமிடம் உள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

மேலும், இதுவரை யாரும் இவ்வாறு டிரைலர் வெளியிடாத நிலையில் விஜய் ஆண்டனி புதுமை செய்துள்ளதாக கமெண்ட் செய்து கொண்டு வருகின்றனர்.

Tags :