Advertisement

ஜிம் பயிற்சியாளர் பாலியல் தொல்லை அளிப்பதாக பெங்காலி நடிகை புகார்

By: Nagaraj Tue, 21 Feb 2023 9:03:26 PM

ஜிம் பயிற்சியாளர் பாலியல் தொல்லை அளிப்பதாக பெங்காலி நடிகை புகார்

கொல்கத்தா: பெங்காலி நடிகை பாலியல் புகார்... ஜிம் பயிற்சியாளர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கொல்கத்தாவில் உள்ள பாரக்பூர் காவல் நிலையத்தில் பிரபல பெங்காலி நடிகை பாயல் சர்க்கார் புகார் அளித்துள்ளார்.

இவர் பல ஹிந்தி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி பாஜகவுடன் இணைந்து அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ஜிம் பயிற்சியாளர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கொல்கத்தாவில் உள்ள பாரக்பூர் காவல் நிலையத்தில் பாயல் புகார் அளித்தார்.

bjp,complaint,kolkata,political , கொல்கத்தா, ஜிம், புகார், மிரட்டினார்

அவர் அளித்த புகாரில், “எனக்கு செல்போனில் தொடர்ந்து ஆபாசமான செய்திகள் வருகின்றன. அந்த எண்ணை சோதித்தபோது அந்த நபர் ஜிம் பயிற்சியாளர் என்பது தெரிந்தது.

அவரும் எனக்கு தூரத்து உறவினர். அந்த எண்ணை பிளாக் செய்தேன். உடனே அவர் மற்றொரு எண்ணிலிருந்து ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பினார்.அவர் ஆபாசமான படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்.

Tags :
|