Advertisement

பகாசுரன் படம் ஓடிடியில் வரும் 24ம் தேதி வெளியாகிறது

By: Nagaraj Sun, 19 Mar 2023 5:47:45 PM

பகாசுரன் படம் ஓடிடியில் வரும் 24ம் தேதி வெளியாகிறது

சென்னை: ஓடிடியில் வரும் 24ம் தேதி ரிலீஸ்... மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பகாசுரன்’ திரைப்படம் ஓடிடியில் மார்ச் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களுக்குப் பிறகு மோகன்.ஜி இயக்கும் படம் ‘பகாசுரன்’. பிப்ரவரி 17 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் செல்வராகவன் மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

amazon prime,film,ott,bhagasuran,in theaters ,அமேசான் பிரைம் ஓடிடி, திரையரங்குகளில், பகாசுரன்

படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் மார்ச் 24-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ‘பகாசுரன்’ படத்தின் வெற்றி விழாவின் ஒரு பகுதியாக இயக்குனர் ஜி. மோகனுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை பரிசளித்தார் தயாரிப்பாளர் கவுதம்.

Tags :
|
|