- வீடு›
- பொழுதுபோக்கு›
- பகவந்த்கேசரி திரைப்படம் 3 நாட்களில் ரூ.71 கோடி வசூல்
பகவந்த்கேசரி திரைப்படம் 3 நாட்களில் ரூ.71 கோடி வசூல்
By: Nagaraj Mon, 23 Oct 2023 3:41:06 PM
ஐதராபாத்: நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
தெலுங்கு திரையுலகில் மூத்த முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் பாலகிருஷ்ணா. இவருடைய ஆக்ஷன் காட்சிகளுக்கு தென்னிந்திய சினிமாவில் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
பாலகிருஷ்ணா நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் பகவந்த் கேசரி. இப்படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து ஸ்ரீ லீலா, காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இதுவரை பகவந்த் கேசரி திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 71 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.