Advertisement

வெற்றி மாறன் படத்திலிருந்து பாரதிராஜா விலகல்?

By: Nagaraj Mon, 28 Dec 2020 8:40:42 PM

வெற்றி மாறன் படத்திலிருந்து பாரதிராஜா விலகல்?

வெற்றி மாறன் படத்திலிருந்து பாரதிராஜா விலக அந்த கேரக்டரில் நடிகர் கிஷோர் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக விளங்குபவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் சில படங்கள் வெளிவந்திருந்தாலும் அவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல், கோலிவுட்டில் வெற்றிமாறன் இயக்குனராக பணியாற்றியதோடு மட்டுமில்லாமல், சில படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் திகழ்கிறார்.

மேலும் வெற்றிமாறன் அடுத்த சூரியை கதாநாயகனாக வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க, இசைஞானி இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

bharathiraja,resigned,kishore,director hit maran ,பாரதிராஜா, விலகினார், கிஷோர், இயக்குனர் வெற்றி மாறன்

இந்த நிலையில் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பாரதிராஜா, படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' என்கின்ற சிறுகதையை மையமாகக்கொண்டு, வெற்றிமாறன் இயக்கவிருக்கும் இந்தப்படத்தில் பாரதிராஜா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் தற்போது அவர் இந்தப் படத்தில் இருந்து விலகி உள்ளதாக கூப்பிடுகிறது.

ஏனென்றால், பாரதிராஜா நடிக்கவிருந்த காட்சிகள் சத்தியமங்கலம் வனப்பகுதியில் படமாக்கப்பட இருந்ததாம். அங்கு உள்ள குளிர் சூழ்நிலை பாரதிராஜாவின் உடலுக்கு ஒத்து வராதாம். இதனால்தான் பாரதிராஜா அந்த படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது.

அதே போல், பாரதிராஜாவின் கதாபாத்திரத்தில் பிரபல வில்லன் நாயகனான கிஷோர் நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே கிஷோர் வெற்றிமாறனின் சில படங்களில் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :