Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • டாஸ்க்கை நீங்கள் முறையாக செய்ய தவறி விட்டீர்கள்... பாலாஜிக்கு பிக்பாஸ் கண்டனம்

டாஸ்க்கை நீங்கள் முறையாக செய்ய தவறி விட்டீர்கள்... பாலாஜிக்கு பிக்பாஸ் கண்டனம்

By: Monisha Thu, 12 Nov 2020 4:46:18 PM

டாஸ்க்கை நீங்கள் முறையாக செய்ய தவறி விட்டீர்கள்... பாலாஜிக்கு பிக்பாஸ் கண்டனம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான பாலாஜி இந்த வாரம் ஜெயிலுக்கு செல்வதில் இருந்து தப்பிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது

பாட்டி சொல்லை தட்டாதே என்ற டாஸ்க் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையில் இந்த டாஸ்க்கில் 'பாட்டியை அதிகமாக சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதை சரியாக புரிந்து கொள்ளாமல், சரியான திசையில் பயணம் செய்து முறையாக டாஸ்க்கை முடிக்காமல் நீங்கள் அனைவரும் தவறி விட்டீர்கள்' என்று பிக்பாஸ் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் இந்த டாஸ்க்கை சரியாக செய்யாததால் போட்டியாளர்களுக்கு பூஜ்ஜியம் லக்சரி பட்ஜெட் என்ற அறிவிப்பையும் பிக்பாஸ் வெளியிட்டார். இதனால் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

big boss,task,balaji,competitors,shock ,பிக்பாஸ்,டாஸ்க்,பாலாஜி,போட்டியாளர்கள்,அதிர்ச்சி

மேலும் பிக்பாஸ் பேசிக்கொண்டிருந்தபோது, பாலாஜி 'அந்த டாஸ்க்கில் சொத்து பத்திரத்தை நான் எடுக்கவில்லை' என பாலா கூறினார். அப்போது பிக்பாஸ் பாலாவிடம் 'இந்த டாஸ்க்கை நீங்கள் முறையாக செய்ய தவறி விட்டீர்கள்' என்று கண்டனம் தெரிவித்ததோடு, 'முதலில் முழுசாக டாஸ்க்கை புரிந்துகொண்டு அதன் பின் விளையாடுங்கள்' என்று கூறினார்.

இந்த வாரம் ஒருசிலர் போட்டியாளர்களின் அதிருப்தியை பெற்ற பாலாஜி, பிக்பாஸின் கண்டனத்தையும் பெற்றுள்ளதால் இந்த வாரம் அவர் சிறைக்கு தள்ளப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த வாரமே சிறைக்கு சென்றிருக்க வேண்டிய பாலாஜி அதிர்ஷ்டவசத்தால் தப்பித்தார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

Tags :
|
|