Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நாமினேஷன் செய்யப்பட்ட காரணத்தை கொளுத்திப் போட்ட பிக்பாஸ்... கடுப்பான பாலாஜி!

நாமினேஷன் செய்யப்பட்ட காரணத்தை கொளுத்திப் போட்ட பிக்பாஸ்... கடுப்பான பாலாஜி!

By: Monisha Mon, 16 Nov 2020 2:35:00 PM

நாமினேஷன் செய்யப்பட்ட காரணத்தை கொளுத்திப் போட்ட பிக்பாஸ்... கடுப்பான பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று அனிதா, சுசித்ரா, ஆரி மற்றும் பாலாஜி ஆகிய நால்வர் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து பிக்பாஸ் முறையான அறிவிப்பை வெளியிடும் இரண்டாவது புரமோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இதில் நான்சிங்க்ல போறாங்க, சிடுமூஞ்சி மேக்ஸ், காதல் கண்ணை மறைக்குது என நாமினேஷன் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து பிக்பாஸ் விளக்குகிறார். இதுவரை நாமினேஷன் செய்யப்பட்டதன் காரணத்தை பிக்பாஸ் கூறவில்லை என்ற நிலையில் முதல் முறையாக போட்டியாளர்கள் கூறிய காரணத்தை கூறி, பிக்பாஸே கொளுத்திப் போட்டு உள்ளார் என்பது ஆச்சரியமான ஒன்று ஆகும்.

nomination,big boss,balaji,love,shivani ,நாமினேஷன்,பிக்பாஸ்,பாலாஜி,காதல்,ஷிவானி

காதல் கண்ணை மறைக்குது என்ற காரணத்தைக் கேட்டவுடன் கடுப்பான பாலாஜி 'இங்கே யாரும் காதல் பண்ணவில்லை, நான் காதல் செய்வதாக யாராவது கூறினால் அப்புறம் நன்றாக கேட்பேன்' என்று கூறினார். மேலும் ஷிவானியை பார்த்து 'உன் மேல் காதல் வந்தால் நானே சொல்கிறேன், ஆனால் காதல் வராது' என்று கூறியபோது ஷிவானியின் முக ரியாக்சன் பார்வையாளர்களுக்கு சரியான காமெடியாக இருந்தது.

மொத்தத்தில் பாலாஜி தனக்கு காதல் இல்லை என்று கூறியும் பிக்பாஸ் உள்பட போட்டியாளர்கள் சிலர் இதுகுறித்து கொளுத்திப் போட்டுள்ளதற்கு பாலாஜியின் ரியாக்சன் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags :
|
|