Advertisement

விஜய்யின் வாரிசு படத்தில் இணைந்த பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராமன்

By: Nagaraj Tue, 13 Dec 2022 11:21:10 PM

விஜய்யின் வாரிசு படத்தில் இணைந்த பிக்பாஸ்  கணேஷ் வெங்கட்ராமன்

சென்னை: விஜய்யின் வாரிசு படத்தில் பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ளார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது.

vijay,cinema,bigg boss popularity,varisu,bigg boss popularity ,விஜய், சினிமா, பிக்பாஸ் பிரபலம், வாரிசு, பிக்பாஸ் பிரபலம்

இத்திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பானது சென்னையில் நடந்து வந்தது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.

இதனால் விஜய் விசாகபட்டினத்திற்கு படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து புறப்பட்டார். விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட விஜய்யின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. தற்போது சூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் தற்போது பிக்பாக்ஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் கணேஷ் வெங்கட்ராமன் வாரிசு திரைப்படத்தில் இணைந்திருப்பதாக அறிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அவர் இணையத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகின்றது.

Tags :
|
|
|