Advertisement

பிக் பாஸ் ஜூலி திருமண கோலத்தில் வெளியான புகைப்படம் வைரல்

By: Nagaraj Sat, 13 May 2023 11:39:36 PM

பிக் பாஸ் ஜூலி திருமண கோலத்தில் வெளியான புகைப்படம் வைரல்

சென்னை: பிக் பாஸ் ஜூலி திருமண கோலத்தில் வெளியான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் திருமணம் முடிந்த தருணமா இது என்று கேள்வி எழுப்பினர்.

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் ஜூலி.

அதனால் சின்னத்திரையில் அறிமுகமானவர், அதற்கு முன் நர்ஸ் ஆக பணிபுரிந்த வந்த இவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பிறகு தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளாராக கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் அவர் விளையாடிய விதம் பலருக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

marriage,fans,question,photos,serial,julie ,திருமணம், ரசிகர்கள், கேள்வி, புகைப்படங்கள், சீரியல், ஜூலி

தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார், மேலும் டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தற்போது திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதனைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்தான் டிவி சீரியல் படப்பிடிப்பிற்காக தான் ஜூலி மாலையும் கழுத்துமாக நின்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ’தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலில் நடித்து வரும் ஜூலி, அந்த சீரியலுக்காக போட்ட திருமண கெட்டப் தான் இந்த புகைப்படங்கள் என்று தெரியவந்துள்ளது.

Tags :
|
|
|