Advertisement

வாக்குவாதத்துடன் தொடங்கும் புதிய மனிதா டாஸ்க்!

By: Monisha Wed, 09 Dec 2020 5:12:11 PM

வாக்குவாதத்துடன் தொடங்கும் புதிய மனிதா டாஸ்க்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்ற 'புதிய மனிதா' என்ற டாஸ்க்கில் பாலாஜி அணி மனிதர்கள் அணியாகவும், அர்ச்சனா அணி ரோபோ அணியாகவும் விளையாடினார்கள். இதில் அர்ச்சனாவின் தந்தை குறித்த கேள்வியை நிஷா கேட்டு பொறுமையை சோதிக்க வைத்ததால் பிக்பாஸ் வீட்டில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் டாஸ்க்கில் அர்ச்சனா அணியினர் மனிதர்கள் அணியாகவும், பாலாஜி அணியினர் ரோபோ அணியாகவும் விளையாட உள்ளனர்.

bigg boss show,debate,balaji,archana,condition ,பிக்பாஸ் நிகழ்ச்சி,வாக்குவாதம்,பாலாஜி,அர்ச்சனா,கண்டிஷன்

நேற்று டாஸ்க் என்றப் பெயரில் கொடுமைப் படுத்திய பாலாஜி அணியினர்களை பழிவாங்க அர்ச்சனா அணிக்கு இன்று ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது

ஆனால் இன்றைய டாஸ்க் தொடங்கும் முன்னரே பாலாஜி அணியினர் சுதாரித்து முன்கூட்டியே சில கண்டிஷன்கள் போடுவதை அர்ச்சனா அணியினர் ஏற்று கொள்ள மறுப்பதால் நடைபெறும் வாக்குவாதத்துடன் இன்றைய முதல் புரமோ முடிவடைகிறது. மேலும் இன்றைய டாஸ்க்கை பாலாஜி சீரியஸாக எடுத்து கொண்டது போலவே தெரியவில்லை.

Tags :
|
|