Advertisement

இந்திய குடியுரிமை பெற்றார் பாலிவுட் சினிமா நடிகர் அக்‌ஷய் குமார்

By: vaithegi Tue, 15 Aug 2023 3:42:58 PM

இந்திய குடியுரிமை பெற்றார்  பாலிவுட் சினிமா நடிகர் அக்‌ஷய் குமார்


55 வயதான அக்‌ஷய் குமார், கடந்த 30 ஆண்டுகளாக இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகராக இருந்து கொண்டு வருகிறார். இதையடுத்து அண்மையில் அவரது நடிப்பில் ‘ஓ.எம்.ஜி 2’ படம் வெளியானது. இதில் சிவபெருமானின் தூதுவராக அக்‌ஷய் குமார் நடித்து உள்ளார். இந்த சூழலில் அவர் இந்திய குடியுரிமை பெற்றுள்ளதாக தெரிவித்து உள்ளார்.

இதற்கு முன்னதாக, கனடா நாட்டு குடியுரிமையை அவர் பெற்றிருந்தார். அது சார்ந்து அவர் மீது ஒரு தரப்பினர் விமர்சனம் மேற்கொண்டு வந்தனர். இச்சூழலில் இந்திய குடியுரிமையை அவர் பெற்றுள்ளார்.

actor akshay kumar,indian citizen ,நடிகர் அக்‌ஷய் குமார்,இந்திய குடியுரிமை

இந்திய பாஸ்போர்ட் வேண்டி அவர் கடந்த 2019-ல் விண்ணப்பித்து இருந்ததாக தகவல் ஒன்று வெளியானது. கரோனா பெருந்தொற்று காரணமாக அதை பெறுவதில் காலதாமதமானது என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குடியுரிமை பெற்று உள்ளதற்கான சான்றை பகிர்ந்து தனது சுதந்திர தின வாழ்த்தை அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கொண்டு வருகின்றனர்.


Tags :