Advertisement

'ஆதிபுருஷ்' படத்தின் கதாநாயகியானார் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன்

By: Nagaraj Mon, 30 Nov 2020 09:53:35 AM

'ஆதிபுருஷ்' படத்தின் கதாநாயகியானார் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன்

பிரபாஸ் படத்தில் கீர்த்தி சனோன் கதாநாயகி... நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ள 'ஆதிபுருஷ் 'திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடிக்கவுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானாவர். இதையடுத்து இவர் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் 'ஆதிபுருஷ்' என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகவுள்ளது. மேலும் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியாகவுள்ளது.

prabhas,keerthi sanon,adipurush film,rs 500 crore budget ,பிரபாஸ், கீர்த்தி சனோன், ஆதிபுருஷ் படம், ரூ.500 கோடி பட்ஜெட்

இந்த திரைப்படம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் சையிப் அலிகான் ராவணனாக நடிக்கவுள்ளார். இதையடுத்து சீதையின் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் பாலிவுட் நடிகர் சன்னி சிங் நடிக்க லட்சுமணன் கதாபாத்திரத்தில் பிரபாஸின் தம்பியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஹுபலி படம் ஏற்கனவே மெஹாஹிட் அடித்துள்ளதால் இந்தப் படத்திற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

Tags :