Advertisement

பிரபல பாலிவுட் இயக்குநர் நிஷிகாந்த் காமத் உடல்நிலை கவலைக்கிடம்!

By: Monisha Thu, 13 Aug 2020 10:53:56 AM

பிரபல பாலிவுட் இயக்குநர் நிஷிகாந்த் காமத் உடல்நிலை கவலைக்கிடம்!

தமிழில் மாதவன் நடித்த 'எவனோ ஒருவன்' என்ற திரைப்படத்தை இயக்கியவர் நிஷிகாந்த் காமத். இவர் பிரபல பாலிவுட் இயக்குனரும் ஆவார். தற்போது அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

பாலிவுட் திரையுலகிற்கு கடந்த சில மாதங்களாகவே நேரம் சரியில்லை. கடந்த சில மாதங்களில் பாலிவுட் நடிகர் இர்பான்கான், ரிஷிகபூர், சுஷாந்த் சிங் உள்பட பல பிரபலங்கள் ஏற்கனவே மரணம் அடைந்து உள்ளனர்.

bollywood,director,nishikant kamath,health,anxiety ,பாலிவுட்,இயக்குநர்,நிஷிகாந்த் காமத்,உடல்நிலை,கவலைக்கிடம்

இந்த நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் நிஷிகாந்த் காமத் தற்போது கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கியது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|