Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வரும் 20ம் தேதி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடவில்லை; ஆர்ஆர்ஆர் படக்குழு அறிவிப்பு

வரும் 20ம் தேதி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடவில்லை; ஆர்ஆர்ஆர் படக்குழு அறிவிப்பு

By: Nagaraj Mon, 18 May 2020 5:10:50 PM

வரும் 20ம் தேதி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடவில்லை; ஆர்ஆர்ஆர் படக்குழு அறிவிப்பு

வரும் 20ம் தேதி ஆர்ஆர்ஆர் படத்தின் போஸ்டர் வெளியிட வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெகு எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பாகுபலி படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலி தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.


burst look,poster,no issue,rrr image,rajamouli ,பர்ஸ்ட் லுக், போஸ்டர், வெளியீடு இல்லை, ஆர்ஆர்ஆர் படம், ராஜமவுலி

டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது. இதில் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. வரும் மே 20-ந் தேதி இப்படத்தின் நாயகன் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளையொட்டி அவரது கேரக்டரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

ஆனால் கொரோனா ஊரடங்கால் பணிகள் அனைத்தும் முடங்கியதால், பர்ஸ்ட் லுக் போஸ்டரோ, வீடியோவோ வெளியிட வாய்ப்பில்லை என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags :
|