Advertisement

மார்க் ஆண்டனி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

By: Nagaraj Mon, 15 May 2023 7:56:56 PM

மார்க் ஆண்டனி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

சென்னை: மார்க் ஆண்டனி படத்தில் நடிகர் விஷால், சுனில் நடிக்கும் பாகங்கள் முடிந்துவிட்டன. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் நாயகியாக ரிது வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

birthday,cake,vishal, ,கேக், புஷ்பா, விஷால்,  ரசிகர்கள், வைரல்

‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடிகர் விஷால், சுனில் நடிக்கும் பாகங்கள் முடிந்துவிட்டன. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

இது தொடர்பான வீடியோவை நடிகர் விஷால் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Tags :
|
|