Advertisement

கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் தனுஷ் பிறந்தநாளில் வருதா?

By: Nagaraj Fri, 16 June 2023 11:14:19 PM

கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் தனுஷ் பிறந்தநாளில் வருதா?

சென்னை: பிறந்தநாளில் அப்டேட்... அருண் மாதேஸ்வரண் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட் தனுஷ் பிறந்தநாள் அன்று வெளியாகவிருப்பதாக தகவல்கள் அறியப்படுகிறது.

இப்படத்தில் தனுஷுடன், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ் போன்ற நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

1930-40 களின் காலகட்டப் பின்னணியில் இப்படம் உருவாகிவரும் நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

first look,poster,release,date announcement,dhanush ,பர்ஸ்ட் லுக், போஸ்டர், ரிலீஸ், தேதி அறிவிப்பு, தனுஷ்

'வாத்தி' படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே அவரது நடிப்பில் 'கேப்டன் மில்லர்' படம் வெளிவரவிருக்கிறது.

இதையடுத்து, படத்தின் மேக்கிங் வீடியோ, கிளிம்ஸ் வீடியோ என அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தது. இந்நிலையில், தனுஷ் பிறந்தநாள் அன்று 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் வெளியாகவிருப்பதாகவும், அத்துடன் வரும் வாரம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக போஸ்டருடன் ரிலீஸ் தேதி வெளியாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags :
|