Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கேப்டன் உடல்நிலை நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது ..விஜயபிரபாகரன்

கேப்டன் உடல்நிலை நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது ..விஜயபிரபாகரன்

By: vaithegi Wed, 23 Aug 2023 11:22:28 AM

கேப்டன் உடல்நிலை நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது  ..விஜயபிரபாகரன்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாகவே வீட்டிலேயே ஓய்வில் இருந்துவருகிறார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்தின் மகன்விஜயபிரபாகரன் கூறியதாவது,

“கேப்டனின் உடல்நிலை சற்று பின்னடைவுதான். ஆனால் அவர் நன்றாக இருக்கிறார். அவர் நூறு வயசு வரை நன்றாக இருப்பார். ஆனால் பழையபடிவருவாரா, பேசுவாரா, நடப்பாரா என்றால், அதற்கான எல்லா முயற்சிகளை எடுத்து கொண்டு வருகிறோம்.

vijaya prabhakaran,captain ,விஜயபிரபாகரன் ,கேப்டன்

உங்களைப் போலவே நாங்களும் நம்புகிறோம். இப்போதைக்கு கேப்டன் நலமுடன் இருக்கிறார்” என்றார். இதற்கிடையே, விஜயபிரபாகரன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்ததாவது, “கேப்டன் உடல்நிலை நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது.

எனவே தயவுசெய்து வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். வழக்கம்போன்று ஊடகங்கள் தவறான தலைப்பில் சித்தரிக்கின்றன. ஆக.25-ம் தேதி விஜயகாந்த் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாகக் கொண்டாடலாம்” என அவர் தெரிவித்து உள்ளார்.

Tags :