- வீடு›
- பொழுதுபோக்கு›
- சென்னையில் நடந்த வாரிசு இசை வெளியீட்டு விழாவில் குவிந்த பிரபலங்கள்
சென்னையில் நடந்த வாரிசு இசை வெளியீட்டு விழாவில் குவிந்த பிரபலங்கள்
By: Nagaraj Sat, 24 Dec 2022 9:27:15 PM
சென்னை: சென்னையில் நடந்து வரும் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் எக்கச்சக்க பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு
பல்வேறு கட்டங்களாக பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு
வந்தது.
இந்நிலையில் விஜய் ரசிகர்களை
உற்சாகப்படுத்தும் வகையில், ஃபர்ஸ்ட் சிங்கிள், செகன்ட் சிங்கிள் என
பாடல்கள் வெளியாகின. இந்நிலையில் இசை வெளியீட்டு விழா நேரு விளையாட்டு
அரங்கில் தொடங்கியது.
விழா பிரம்மாண்டமாக
நடந்தது. விழாவிற்கு நடிகை ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், அனிருத்,
பிரகாஷ்ராஜ், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, கணேஷ் வெங்கட்ராமன் என திரை
பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளார்கள். இது தொடர்பான புகைப்படங்கள்
தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.