Advertisement

செம... செம சண்டைக்காட்சிகளுடன் தடதடக்கும் பிக்பாஸ் வீடு

By: Nagaraj Wed, 14 Oct 2020 9:09:26 PM

செம... செம சண்டைக்காட்சிகளுடன் தடதடக்கும் பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சண்டைக் காட்சிகளுடன் தடதடவென்று கடந்து செல்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று நடைபெற்ற 'எவிக்ஷன் ப்ரீ பாஸ்' ( Eviction Free Pass) தேர்வு முறையின் போது பேசிய சுரேஷ் சக்கரவர்த்தி பிக் பாஸ் வீட்டில் குரூப்பிசம் இருக்கிறது, என்னை எல்லாரும் சேர்ந்து கார்னர் செய்கின்றனர் என கூறினார்.

சுரேஷ் பேசியது வெளியே இருந்த சக போட்டியாளர்களுக்கு டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன் பின்னர் சுரேஷ் வெளியேறிய நிலையில், குரூப்பிசம் இருப்பதை எப்போது கண்டுபிடித்தீர்கள் என ரியோ கேள்வி எழுப்பினார்.

big boss 4,rio,suresh,groupism,second promo ,பிக்பாஸ்4, ரியோ, சுரேஷ், குரூப்பிஸம், இரண்டாவது ப்ரோமோ

அதற்கு சுரேஷ் அது கேம், அப்போதே முடிந்துவிட்டது என கூற அப்போது குறுக்கிட்ட சனம் ஷெட்டி இனிமேல் தான் கேம் ஆரம்பம் என தெரிவித்தார்.அப்போது யாரும் குறுக்கிட வேண்டாம் என ரியோ தடுத்து கொண்டிருக்கையில் அங்கிருந்து சுரேஷ் சக்ரவர்த்தி நகர்ந்து சென்று விட்டார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுத்தியடுத்து நான் இது குறித்து உன்னிடம் தனியாக விளக்குகிறேன் என சுரேஷ் கூறினார். இந்த நிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், இந்த மோதல் மீண்டும் தொடர்கிறது. ரியோ சுரேஷிடம் இந்த வீட்டுல குரூப்பிஸம் இருக்குன்னு சொன்னீங்களே? உண்மையில் இந்த வீட்டுல குரூப்பிஸம் இருக்கா? என கேள்வி எழுப்புகிறார்.

ஆனால் நீங்கள் அனைவரும் செய்தது என்னை வீக் ஆக்கவில்லை என சுரேஷ் தெரிவித்தார். நாங்கள் உங்களை என்ன செய்தோம் என்று தான் கேட்கிறேன் என ரியோ கேட்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

Tags :
|
|