- வீடு›
- பொழுதுபோக்கு›
- விஜய்யின் லியோ படத்திற்கான சென்சார் வந்தது: ரசிகர்கள் உற்சாகம்
விஜய்யின் லியோ படத்திற்கான சென்சார் வந்தது: ரசிகர்கள் உற்சாகம்
By: Nagaraj Thu, 05 Oct 2023 2:06:37 PM
சென்னை: விஜய் படத்தின் சென்சார்... விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் சென்சார் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் லியோ. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் பிரமாண்ட பொருட் செலவில் தயாரித்துள்ளது. படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதால் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது. ஏற்கெனவே படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கான சென்சார் நடைபெற்ற நிலையில், இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை சென்சார் குழுவினர் வழங்கியுள்ளனர். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.