Advertisement

சந்திரமுகி-2 படத்தின் முதல்நாள் வசூல் உலகளவில் ரூ.13 கோடி!!!

By: Nagaraj Fri, 29 Sept 2023 10:33:58 AM

சந்திரமுகி-2 படத்தின் முதல்நாள் வசூல் உலகளவில் ரூ.13 கோடி!!!

சென்னை: முதல் நாள் மட்டுமே சந்திரமுகி 2 திரைப்படம் உலகளவில் ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது சந்திரமுகி 2 படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங்.

சந்திரமுகி முதல் பாகம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ரஜினிக்கு 2005ம் ஆண்டு கம் பேக் கொடுத்த திரைப்படமும் அதுதான்.

அதனுடைய இரண்டாவது பாகம் நேற்று திரையரங்கில் வெளிவந்தது. பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரணாவத் நடிப்பில் சந்திரமுகி 2 நேற்று வெளியான நிலையில், மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

athadha,chandramukhi-2,box office,new collection,raghava ,சாதனை, சந்திரமுகி-2, பாக்ஸ் ஆபீஸ், புதிய வசூல், ராகவா

முதல் பாகத்தை அப்படியே ரீமேக் செய்து வைத்துள்ளார்கள் என்று விமர்சனம் இருந்தாலும் கூட சந்திரமுகி 2 படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது. முதல் நாள் மட்டுமே சந்திரமுகி 2 திரைப்படம் உலகளவில் ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது சந்திரமுகி 2 படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங்.

கண்டிப்பாக இந்த வார இறுதிக்குள் பாக்ஸ் ஆபிஸில் புதிய வசூல் சாதனையை சந்திரமுகி 2 படைக்கும் என கூறப்படுகிறது.

Tags :