Advertisement

சந்திரமுகி-2 திரைப்பட பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல்

By: Nagaraj Fri, 15 Sept 2023 10:31:29 PM

சந்திரமுகி-2 திரைப்பட பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல்

சென்னை: இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.

chandramukhi-2,movie,released,song, ,சந்திரமுகி 2, திரைப்படம், பாடல், வெளியானது

‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் அடுத்த பாடலான ‘தோரி போரி’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இதில், இடம்பெற்றுள்ள ‘அன்னை அன்பு முகத்தில் ஆண்டவனை கண்டிடலாம்’ போன்ற வரிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Tags :
|
|