Advertisement

சந்திரமுகி-2 படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு

By: Nagaraj Thu, 24 Aug 2023 6:39:39 PM

சந்திரமுகி-2 படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு

சென்னை: 'சந்திரமுகி- 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

 ,ராகவா லாரன்ஸ், இசை, வெளியீட்டு விழா, அறிவிப்பு, சந்திரமுகி-2

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், 'சந்திரமுகி- 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது. இதனை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

Tags :