Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நாளை வெளியாகிறது சந்திரமுகி-2: ரஜினியை சந்தித்து ஆசிப்பெற்றார் ராகவா லாரன்ஸ்

நாளை வெளியாகிறது சந்திரமுகி-2: ரஜினியை சந்தித்து ஆசிப்பெற்றார் ராகவா லாரன்ஸ்

By: Nagaraj Wed, 27 Sept 2023 5:01:33 PM

நாளை வெளியாகிறது சந்திரமுகி-2: ரஜினியை சந்தித்து ஆசிப்பெற்றார் ராகவா லாரன்ஸ்

சென்னை: சந்திரமுகி-2 திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் ஒரே நாள் உள்ள நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. இந்த திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இன்றளவும் சந்திரமுகிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து தான் வருகிறார்கள்.

actor raghava,blessed,actor rajinikanth,tomorrow,chandramukhi-2 ,நடிகர் ராகவா, ஆசி பெற்றார், நடிகர் ரஜினிகாந்த், நாளை, சந்திரமுகி-2

அவ்வபோது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சந்திரமுகி படத்தை பார்க்க ரசிகர்கள் இன்றும் ஆர்வமாக உள்ளனர். ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு என டாப் நடிகர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து நடித்து பட்டைய கிளப்பியிருப்பார்கள். இந்த படத்தின் 2ஆம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் கேட்டுவந்தனர்.

இந்நிலையில் இயக்குனர் பி.வாசு 2ஆம் பாகம் எடுக்க முடிவெடுத்தார். அதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்துள்ளார். அதேபோல் முதல் பாகத்தில் நடித்த நடிகர் வடிவேலு சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் இவர்களை தவிர லட்சுமிமேனன் கங்கனா ரனவத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் நாளை 28ம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்த்தை காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Tags :