Advertisement

சந்திரமுகியில் நடித்த சொர்ணாவின் குடும்ப புகைப்படம் வைரலாகிறது

By: Nagaraj Tue, 29 Aug 2023 10:13:54 PM

சந்திரமுகியில் நடித்த சொர்ணாவின் குடும்ப புகைப்படம் வைரலாகிறது

சென்னை: சந்திரமுகி படத்தில் வடிவேலு மனைவியாக நடித்த சொர்ணாவா இவர், ஆளே மாறிவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் 2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர், மாளவிகா, வினீத் என பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்தவர் சொர்ணா. தாய் மனசு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சொர்ணா.

fans,chandramukhi,sorna,family,photo,surprise ,ரசிகர்கள், சந்திரமுகி, சொர்ணா, குடும்பம், புகைப்படம், ஆச்சரியம்

தொடர்ந்து மாயா பஜார், கோகுலத்தில் சீதை, பெரியதம்பி போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ள இவர் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகினார்.

நடிகை சொர்ணா 2003ம் ஆண்டு Varghese Jacob என்பவரை திருமணம் செய்துகொண்டார். வெளிநாட்டில் செட்டில் ஆகியுள்ள இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

தற்போது நடிகை சொர்ணாவின் புகைப்படம் ஒன்று வெளியாக அட சந்திரமுகி சொர்ணாவா இவர், ஆளே மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags :
|
|
|
|