Advertisement

சந்திரயான் 3 .. திரையுலகினர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து

By: vaithegi Thu, 24 Aug 2023 11:42:15 AM

சந்திரயான் 3   ..  திரையுலகினர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து


சந்திரயான் 3 விண்கலம் மூலம் இந்தியா நிலவில் தடம் பதித்திருக்கும் நிலையில் திரையுலகினர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பு ...

இதனை அடுத்து இது தொடர்பாக இயக்குநர் ராஜமவுலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது , “இதயம் பெருமையால் பூரிப்படைகிறது. கண்ணீர் கன்னங்களில் வழிகிறது. சந்திரயான் 3 வெற்றிகரமான தரையிறக்கம் விண்வெளியில் புதிய சகாப்தம்” என பதிவிட்டு உள்ளார்.

நடிகர் அக்ஷய்குமார்: “கோடிக்கணக்கான இதயங்கள் இஸ்ரோவுக்கு நன்றி செலுத்துகின்றன. நீங்கள் எங்களை பெருமைபடுத்தியுள்ளீர்கள். இந்தியா வரலாறு படைப்பதை பார்ப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். நிலவில் இந்தியா. நாம் நிலவில் இருக்கிறோம்” என பதிவிட்டு உள்ளார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு: “விண்வெளி அறிவியலில் இந்தியா மிகப்பெரிய மைல்கல்லை எட்டியதற்கு வாழ்த்துகள்!!” என தெரிவித்துள்ளார்.

குஷ்பு: “இஸ்ரோ ஹீரோக்களுக்கு சல்யூட்” என குஷ்பு பாராட்டு தெரிவித்து உள்ளார்.

மாதவன்: “இந்த சாதனையை விவரிக்க வார்த்தைகளில்லை. என் இதயம் பெருமையால் ததும்கிறது” என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

isro scientists,chandrayaan 3 , இஸ்ரோ விஞ்ஞானிகள்,சந்திரயான் 3

சிரஞ்சீவி: “இந்தியாவுக்கு மிக முக்கியமான சாதனை. இன்று வரலாறு படைக்கப்பட்டது” என சிரஞ்சீவி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மோகன்லால்: "முழு தேசத்தையும் பெருமைப்படுத்திய இஸ்ரோவுக்கு வாழ்த்துகள்" என நடிகர் மோகன்லால் தெரிவித்து உள்ளார்.

மேலும் சிலம்பரசன்: “நிலவில் வெற்றிகரமாக சந்திராயன் 3 விண்கலத்தை தரையிறக்கிய இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். இந்தியர்கள் பெருமைகொள்ளும் வரலாற்று சிறப்பு மிக்க நாள். நட்சத்திரம், நிலவுக்கு அப்பால் உயரத்தை அடையமுடியும் என்ற நம்பிக்கையை கொடுத்த தருணமிது” என்று ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.


Tags :