Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட சார்பட்டா பரம்பரை படம் தேர்வு

மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட சார்பட்டா பரம்பரை படம் தேர்வு

By: Nagaraj Sat, 15 Apr 2023 1:16:01 PM

மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட சார்பட்டா பரம்பரை படம் தேர்வு

சென்னை: சர்வதேச பெருமை... பா. ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடித்து 2021ல் வெளியான திரைப்படம்தான் 'சார்பட்டா பரம்பரை'. இந்நிலையில், இப்படம் 2023-ஆம் ஆண்டு மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பா. ரஞ்சித்தின் திரைப்படங்கள் பெரும்பாலும் பெரிய எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தக்கூடிய படமாகவே அமையும். அந்த விதத்தில் அவர் இயக்கிய 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', என ஒவ்வொன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. அதேபோல், அவரின் நீலம் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் உருவான 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', 'ரைட்டர்' உட்பட படங்களும் வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் இவரது இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்து வெளியான திரைப்படம்தான் 'சார்பட்டா பரம்பரை'. இப்படத்தில் நடிகர் ஆர்யா பயங்கரமாக உடற்பயிற்சி செய்து தன்னை முழுமையாக ஒரு பாக்ஸராவே மாற்றி, கபிலன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

twitter,director ranjith,arya,screening,sarbhata,recognition ,ட்விட்டர், இயக்குனர் ரஞ்சித், ஆர்யா, திரையிடல், சார்பட்டா, அங்கீகாரம்

வடசென்னையில் 1960களில், நிகழ்ந்த குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் அதில் உள்ள அரசியலையும் மையப்படுத்தி காட்சிப்படுத்தியிருந்தனர். அதன்படி, இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை என்ற இரு பாக்ஸிங் குழுக்களுக்கு இடையிலான மோதலை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டிருந்தது.

இப்படத்தில் நடிகர் ஆர்யாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்களும் வெகுவாக ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில், 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை, பா. ரஞ்சித், ஆர்யா இருவரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

Tags :
|