- வீடு›
- பொழுதுபோக்கு›
- ஏமாத்திட்டாங்க... செம கோபத்தில் விஜய் ரசிகர்கள்
ஏமாத்திட்டாங்க... செம கோபத்தில் விஜய் ரசிகர்கள்
By: Nagaraj Sun, 23 Oct 2022 10:33:08 PM
சென்னை: வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனம் மீது விஜய் ரசிகர்கள் செம கோபத்தில் உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் 2023 பொங்கலுக்கு வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
வம்சி இயக்க தமன் இசையமைக்கும் இந்த படத்தினை தில் ராஜு தயாரிக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் தீபாவளி விருந்தாக வெளியாகும்
என சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் சொன்னது மாதிரி தயாரிப்பு நிறுவனம்
பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்கை வெளியிடவில்லை. தற்போது வரை இது குறித்து எந்த
ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனால் உச்சகட்ட கோபத்தில்
இருக்கும் விஜய் ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்தை திட்டி தீர்த்து
வருகின்றனர். செகண்ட் கிளாஸ் புரொடக்சன் நிறுவனம் என விமர்சனம் செய்து
வருகின்றனர். பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்கள்
ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் தங்களுக்கு இது ஏமாற்ற
தீபாவளி என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.