Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலை ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலை ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

By: vaithegi Thu, 21 July 2022 6:55:08 PM

செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலை ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

சென்னை: சர்வதேச அளவில் 44 -வது 'செஸ் ஒலிம்பியாட்' சதுரங்க போட்டிகள் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடக்கிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழக அரசு இந்த போட்டிகளை மிக சிறப்பாக நடத்த திட்டமிட்டு உள்ளது.

மேலும் இப்போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர். 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் "நம்ம செஸ், நம்ம பெருமை" என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுகொண்டு வருகின்றன.

a.r. rahman,chess olympiad,welcome song ,ஏ.ஆர். ரஹ்மான்,செஸ் ஒலிம்பியாட், வரவேற்பு பாடல்

இதை தொடர்ந்து சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடக்க விழா நடைபெறுகிறது.இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதாக கூறப்படுகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கான வரவேற்பு பாடல் வெளியாகியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலை ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags :