Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • லவ்டுடே படத்தை குடும்பத்துடன் பார்த்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

லவ்டுடே படத்தை குடும்பத்துடன் பார்த்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

By: Nagaraj Thu, 17 Nov 2022 11:54:01 AM

லவ்டுடே படத்தை குடும்பத்துடன் பார்த்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை: லவ்டுடே படத்தை பார்த்து படம் நன்றாக இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டி உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து கடந்த 4ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் லவ் டுடே. இப்படத்தில் பிரதீப்புடன் இணைந்து இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

lovetoday,cm,parthar,review,udayanidhi stalin ,
லவ்டுடே, முதல்வர், பார்த்தார், விமர்சனம், உதயநிதி ஸ்டாலின்

மாபெரும் வெற்றியை பெற்றுள்ள இப்படம் இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், லவ் டுடே திரைப்படத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்துள்ளாராம்.

படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய மகனும் நடிகருமான உதயநிதியிடம் படம் நன்றாக இருக்கிறது என்று தன்னுடைய விமர்சனத்தை கூறியுள்ளாராம். இந்த தகவலை அண்மையில் உதயநிதி அளித்த பேட்டியில் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|